திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் ஆணாய்பிறந்தான் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நந்திநகர் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலை கரிகாலன் நகரை சேர்ந்த முனுசாமி (61 வயது) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com