திருவள்ளூர் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் கொண்டபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தாங்கள் வைத்திருந்த பெரிய கோணிப்பையுடன் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 550 பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக குட்கா எடுத்து வந்த திருவள்ளூர் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்த சந்திரன் சந்திராராம் (வயது27), கண்ணன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com