திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு குச்சிக்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் புஷ்பம் (வயது 63). கடந்த 14-ந்தேதியன்று புஷ்பம் தன்னுடைய வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் கால் தவறி அருகில் இருந்த மின் வயரில் விழுந்தார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புஷ்பம் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com