திருப்பூர் அருகே ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

திருப்பூர் அருகே ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் ரெயில் நிலையம் குட்செட் இப்பகுதியில் நேற்று காலை 10.45 மணி அளவில் முதியவர் ஒருவர் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் படுத்து ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி இறந்தார். அருகிலிருந்தவர்கள் பார்த்து உடனடியாக திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபரிடம் இருந்த செல்போனை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் இறந்தவர் திருப்பூர் எஸ்.வி. காலனியைச் சேர்ந்த சண்முகம் (வயது 75) என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், சண்முகம் கடந்த சில நாட்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், இதன் காரணமாக ரெயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com