திருப்புவனம் அருகே விபத்தில் வாலிபர் பலி

திருப்புவனம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

திருப்புவனம்:

திருப்பாச்சேத்தி அருகே உள்ள மிக்கேல்பட்டிணத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 23). இவர் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருமணம் முடிந்த பிறகு வீடு திரும்பிய போது லாடனேந்தல் கீழ்புறத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து படுகாயம் அடைந்தார். திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com