திருப்பத்தூர் அருகே வாலிபர் தற்கொலை

திருப்பத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா மடவாளம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் முரளி. அவரது மகன் சதீஷ் (வயது 21), பட்டதாரி. இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com