திருப்பத்தூர் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

திருப்பத்தூர் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 40). டெல்லியில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி (35), மகன் சரன்ராஜ் (22). இவர்கள் இருவரும் புதூர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ராணி மற்றும் அவரது மகன் சரண்ராஜ் ஆகிய இருவரும் சென்று உள்ளனர்.

ஊருக்கு சென்றிருந்த ராணி திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ராணி புகார் கொடு்த்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com