நெல்லையில் மஞ்சள் பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு? அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

நெல்லையை சேர்ந்த ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டும் வீட்டில் இருந்த போது அவருக்கு கண்கள் அருகே பூஞ்சை நோய் ஏற்பட்டு உள்ளது.
மஞ்சள் பூஞ்சை
மஞ்சள் பூஞ்சை
Published on

நெல்லை:

கொரோனாவை தொடர்ந்து கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய்கள் மக்களை மிரட்டி வருகிறது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்லையை சேர்ந்த ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டும் வீட்டில் இருந்த போது அவருக்கு கண்கள் அருகே பூஞ்சை நோய் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனையில் மஞ்சள் பூஞ்சை பாதிப்பு இருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு ஏற்பட்டது மஞ்சள் பூஞ்சைதானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com