திருமங்கலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

திருமங்கலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் கூடக்கோவில் அருகே உள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகள் குருவம்மாள் (வயது 42). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருவம்மாள் இறந்தார். இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com