திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி மாணவி பலி

திருமங்கலம் அருகே கண்மாயில் குளிக்க சென்ற மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள கரிசல்காளாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரியதர்ஷினி(வயது 14). இவர் சிவரக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் பிரியதர்ஷினி கரிசல்காளாம்பட்டியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். கண்மாயில் குளித்து கொண்டு இருந்தபோது பிரியதர்ஷினி ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதைப் பார்த்த உடன் அங்கு இருந்தவர்கள் பிரியதர்ஷினியை மீட்டனர். பேச்சு மூச்சின்றி கிடந்த அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்மாயில் குளிக்க சென்ற மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com