திருமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை

திருமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 29 பவுன தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை
கொள்ளை
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சாப்டூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜா, ராணுவ வீரர். இவரது மனைவி லட்சுமி (26).

இவர் சின்ன கட்டளை கிராமத்தில் நடந்த பொங்கல் திருவிழாவிற்காக சென்று விட்டார். வீட்டில் அவரது மாமியார் மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் 100 நாள் வேலைக்காக அவரும் சென்றுவிட்டார்.

திருவிழாவிற்கு சென்ற லட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 29 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சாப்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

மேலும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 29 பவுன தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com