திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விஜயனும் (வயது 19) தந்தைக்கு உதவியாக எலக்ட்ரீசியன் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் மின்சாரம் தடைபட்டபோது விஜயன் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com