திருச்சி அருகே கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக மாரியப்பனும் (வயது 37), ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு மலையப்பநகர் பகுதியில் கஞ்சா விற்றதாக சக்திவேல் (20) என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது ரபீக் (27), அரியமங்கலம் உக்கடை பாலம் அருகே லாட்டரி சீட்டு விற்ற சக்திவேல் (35), பொன்மலை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பாஸ்கரன் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com