திருச்செங்கோடு அருகே கடையில் திருட்டு

திருச்செங்கோடு அருகே கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை திருட்டு
கடை திருட்டு
Published on

எலச்சிப்பாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்தில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருபவர் சேகர். இவர் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறந்தபோது, மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது கடையில் இருந்த டி.வி. மற்றும் மின் சாதனங்கள் என ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com