திருச்செங்கோட்டில் சாலை விதிகளை மீறியவர்களுக்கு ரூ.9,200 அபராதம்

திருச்செங்கோட்டில் சாலை விதிகளை மீறியவர்களுக்கு ரூ.9,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
அபராதம்
Published on

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனை நடந்தது. திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், குணசேகரன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல், காவலர் சத்யராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் சோதனையின் போது ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமலும், செல்போன் பேசி கொண்டு என சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 17 பேருக்கு சோதனை அறிக்கை அளித்து ரூ.9,200 அபராதம் விதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com