தற்கொலை
தற்கொலை

துறையூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

துறையூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

துறையூர்:

துறையூரை அடுத்துள்ள புலிவலம் அருகே கீழப்பட்டி சிறுகுடியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com