கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறிப்பு- 3 பேர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

துறையூர்:

துறையூரில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 57). சம்பவத்தன்று இவர் பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, துறையூரில் ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்த 3 பேர் பிரபாகரனை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.35 ஆயிரம் மற்றும் 1½ பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சிங்களாந்தபுரத்தை சேர்ந்த அசோக்குமார்(40), கண்ணனூரை சேர்ந்த பிரகலாதன்(47) மற்றும் பரமசிவம்(51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com