துறையூர் அருகே வாக்குச்சாவடிக்குள் இருதரப்பினர் மோதல்- 6 பேர் மீது வழக்கு

துறையூர் அருகே வாக்குச்சாவடிக்குள் மோதலில் ஈடுபட்ட 6 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

துறையூர்:

துறையூரை அடுத்து உள்ள தவுட்டுபட்டி கிராமத்தைசேர்ந்த 18 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய இளைஞரை அவருடைய உறவினர் ஓட்டுப்போட அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அ.தி.மு.க. முகவர் புரட்சி மணிக்கும்(வயது 23), தி.மு.க.வை சேர்ந்த பூபதிக்கும்(34) வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி வாக்குச்சாவடியில் உள்ள மேஜை, நாற்காலிகளை மாலை 5 மணிக்கு அடித்து உடைத்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக புரட்சிமணி, பூபதி மற்றும் அர்ஜூனன்(35), செல்வகுமார்(27), வரதன்(28), ஆனந்தன்(29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com