துறையூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

துறையூர் அருகே சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து பலி
விபத்து பலி
Published on

துறையூர்:

பெரம்பலூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37), இவரும் கணவாயை சேர்ந்த தங்கமணி(33) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். துறையூர் அருகே முசிறி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com