தடகள பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் சட்டத்தில் கைது

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
தடகள பயிற்சியாளர் நாகராஜன்
தடகள பயிற்சியாளர் நாகராஜன்
Published on

சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சியாளராக இருந்த நாகராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை கமி‌ஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். பாலியல் வழக்கில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மீதும் ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com