அனுமதியின்றி இயங்கிய காப்பகத்தில் இருந்து 3 குழந்தைகள் மீட்பு

மதுரையில் அனுமதியின்றி இயங்கிய காப்பகத்தில் இருந்து 3 குழந்தைகள் மீட்கப்பட்டன.
குழந்தைகள் மீட்பு
குழந்தைகள் மீட்பு
Published on

மதுரை:

மதுரை கடச்சனேந்தலில் தனியார் காப்பகம் ஒன்று உள்ளது. இந்த காப்பகத்திற்கு வருகிற புத்தாண்டையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. அதற்காக அந்த காப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் குறித்து கேட்பதற்காக தொண்டு நிறுவனம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு உறுப்பினர்கள் சென்றனர். அங்கு காப்பகத்தை நடத்தும் பெண் நிர்வாகி ஒருவர், இங்கு 50 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும் உதவிகளை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

உடனே குழந்தைகள் நல உறுப்பினர்கள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை பார்த்த பிறகு என்னென்ன உதவிகள் செய்யலாம் என்று தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர். அப்போது பெண் நிர்வாகி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

அதன்பின்னர் குழந்தைகள் நல உறுப்பினர்கள் விசாரணை நடத்தியதில் அந்த காப்பகம் அரசு அனுமதியின்றி இயங்குவதும், அங்கு 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் இருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 3 குழந்தைகளை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அங்கிருந்த பெண் திருவண்ணாமலை சேர்ந்தவர் என்றும், அவருடைய 2 குழந்தைகளும் அங்கு இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com