பாபநாசம் பகுதியில் மணல் அள்ளிய எந்திரம், லாரி பறிமுதல்- 3 பேர் கைது

பாபநாசம் பகுதியில் அள்ளிய எந்திரம், லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பாபநாசம்:

பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருக்கருக்காவூர் வெட்டாற்றிலிருந்து அனுமதியின்றி ஆற்று மணலை ஏற்றி கொண்டிருந்தபோது ஒரு ஹிட்டாச்சி எந்திரம், ஒரு லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர்கள் புதுக்கோட்டை வைரமூர்த்தி (38), பட்டுக்கோட்டை சின்னப்பா (32), சிவகங்கை சுரேஷ் குமார் (22) ஆகிய மூவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிவகுமார் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com