தோட்டக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேர் கைது

தோட்டக்குறிச்சி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அய்யம்பாளையம் டாஸ்மாக் அருகே உள்ள பெட்டிக்கடையில் வைத்து மது விற்ற கரூர் காந்தி சாலை பகுதியில் வசிக்கும் பரத் (வயது 24) என்பவரையும், மூலிமங்கலம் டாஸ்மாக் அருகே பெட்டிக்கடையில் மது விற்ற நல்லியம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com