தோட்டக்குறிச்சி பகுதியில் சாலையோரம் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம்

தோட்டக்குறிச்சி பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலையோரம் தேங்கிய மழைநீர்
சாலையோரம் தேங்கிய மழைநீர்
Published on

வேலாயுதயம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் தோட்டக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நெடுஞ்சாலையோரங்களை அப்பகுதி வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் உபயோகப்படுத்தி வருகின்றனர். தற்போது தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர பள்ளங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், பள்ளங்களை மணல் கொட்டி மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com