தொப்பூர் அருகே மின்சாரம் தாக்கி பஸ் கண்டக்டர் பலி

தொப்பூர் அருகே மின்சாரம் தாக்கி பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கீழ்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). அரசு பஸ் கண்டக்டர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் நேற்று கீழ்பூரிக்கல் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தொப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முனுசாமி இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com