தொப்பூர் அருகே மது விற்றவர் கைது

தொப்பூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் வெள்ளக்கல் பகுதியிலுள்ள புளியந்தோப்பில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com