தொப்பூர் அருகே மது விற்ற பெண் கைது

தொப்பூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள கெட்டுப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது 40). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக கிராம மக்கள் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் செந்தில்குமார் எம்.பி.யிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று கிராமமக்கள் மற்றும் எம்.பி. ஆகியோர் சவுந்தர்யா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் சவுந்தர்யாவை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com