தோகைமலை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் மீது வழக்கு

தோகைமலை அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

தோகைமலை:

தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி காவல்காரன்பட்டி மொட்டைப்புலி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த காவல்காரன்பட்டி பகுதியை சேர்ந்த அம்மன் தங்கராசு (வயது 55), அதே பகுதியை சேர்ந்த கிழக்குத்தெரு ராமச்சந்திரன் என்ற ராஜேந்திரன் (56), மணிசுந்தரம் என்ற ரமணிசுந்தரம் (49) ஆகிய 3 பேரை பிடித்தார். பின்னர் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல, குளித்தலை பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு சினிமா தியேட்டர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற குளித்தலை மீன்காரத்தெருவைச் சேர்ந்த முகமதுரபி (51) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.100 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com