கொள்ளை
கொள்ளை

தோகைமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தோகைமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4¼ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள நாகனூர் காலனியை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மனைவி கலையரசி (வயது 53). முத்துகாளை மெயின் ரோட்டின் முன் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். கணவருக்கு மதிய சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு மளிகை கடைக்கு கலையரசி சென்றார்.பின்னர் வீடு திரும்பிய கலையரசி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 4¼ பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கணவருக்கு தகவல் தெரிவித்த அவர் பின்னர் தோகைமலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com