தோகைமலை அருகே மது விற்றவர் கைது

தோகைமலை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள ஊமை உடையான் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தோகைமலை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த முருகேசன் (வயது 52) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் அவரிடமிருந்த மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நொய்யல் அருகே மரவாபாளையம் பஸ் நிலையம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்த நொய்யல் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com