தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே உள்ள மேலசீமையார் களத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 24). லாரி உரிமையாளர் மற்றும் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் உறவினரை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஊரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

எதிரே திருச்சியை சேர்ந்த கணேசன் (40) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தோகைமலை அருகே கீழவெளியூர் காமராஜ் நகர் என்ற இடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி கொண்டன. இதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசன் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து ஆனந்தராஜ் தந்தை ரத்தினம் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தராஜ் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கணேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com