திசையன்விளை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

திசையன்விளை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திசையன்விளை:

உவரியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் தீபக் (வயது 39). மீனவர். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நீண்ட நாட்களாக வலிப்பு நோயால் அவதிபட்டு வந்துள்ளார். 

அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் இரவு கடற்கரையில் உள்ள மீன்வலை கூடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி அவரது மனைவி ஜெனித் மேரி உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com