திசையன்விளையில் இன்று ஒரே தெருவில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

திசையன்விளையில் இன்று அதிகாலை ஒரே தெருவில் மர்ம நபர்கள் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திசையன்விளை:

உவரி அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்தவர் ரஜினி தனசிங் (வயது69). இவரது கணவர் இறந்து விட்டதால் ரஜினி தனசிங் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்துள்ளார்.

கடந்த 4-ந்தேதி ஓட்டு போடுவதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று அதே பகுதியில் தனது உறவினர் வீட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாய்-மகன் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டனர்.

இன்று காலை வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 5 அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. பணம் எதுவும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்து ரஜினி தனசிங் உவரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டுமே வீட்டிற்குள் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே தெருவில் பூட்டி கிடந்த மற்றொரு வீட்டையும் மர்ம நபர்கள் 2 பேரும் உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கும் பணம் உள்ளிட்ட பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com