ராகுல் காந்திக்கு கிடைத்த வரவேற்பு என கூறி வைரலாகும் புகைப்படம்

தமிழ் நாட்டு பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ராகுல் காந்தியை மையப்படுத்தி பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், வாகனம் ஒன்றை சுற்றி பெரும் கூட்டத்தினர் நிற்கும் இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு புகைப்படங்களும் தமிழ் நாடு இப்படி தான் ராகுல் காந்தியை வரவேற்கிறது எனும் தகவலுடன் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை தி.மு.க. பிராசார கூட்டத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் மார்ச் 19, 2021 அன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது ஆகும். இரு புகைப்படங்களும் தி.மு.க. அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com