திருவேங்கடம் அருகே ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் ரூ.6 ஆயிரம் அபேஸ்

திருவேங்கடம் அருகே ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் ரூ.6 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

திருவேங்கடம்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் மகேஸ்வரி, ராமலட்சுமி. இருவரும் ராஜபாளையம் அருகே உள்ள தனது உறவினர்களை காண கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே பஸ் சென்றபோது மகேஸ்வரி, தனது கைப்பை பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராமலட்சுமியிடம், மகேஸ்வரி கூறினார்.

அப்போது அவரும் தனது கைப்பையை பார்த்தார். அவரது கைப்பையும் பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரது கைப்பையிலும் இருந்த ரூ.6 ஆயிரத்து 200 திருடப்பட்டது. இதுகுறித்து 2 பேரும் பஸ் நடத்துனரிடம் புகார் தெரிவித்தனர். உடனே பயணிகளுடன் திருவேங்கடம் போலீஸ் நிலையத்துக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களிடம் பணம் திருடியவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. பணம் திருடிய கும்பல் தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com