திருவள்ளூர் அருகே முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

திருவள்ளுர்:

திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுசீலா (வயது 68). நேற்று முன்தினம் சுசீலா தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுசீலாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென சுசீலா அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சுசீலா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com