திருவையாறு அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை

திருவையாறு அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த பள்ளியக்ரஹாரம் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 40). லாரி டிரைவர். இவரது மனைவி முத்துலெட்சுமி(35). இவர்களுக்கு ஜெகதீசன்(15) என்ற மகனும், வர்ஷா (12) என்ற மகளும் உள்ளனர். பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு செல்லும் சாலை மழையினால் சேறும், சகதியுமாக உள்ளது. டாஸ்மாக்கில் பார் நடத்துபவர் ராமலிங்கம் லாரி டிரைவர் என்பதால் அவரிடம் மணல் அடிக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து ராமலிங்கம் தஞ்சை அன்னை சத்யா நகரை சேர்ந்த ரகுவரன் என்பவரிடம் மணல் அடிக்க சொல்லி உள்ளார். அதன்படி ரகுவரன், லாரியில் மணல் ஏற்றி டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் அடித்துள்ளார். இதற்கான தொகையை ராமலிங்கம் வாங்கி ரகுவரனிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்த ரகுவரன், பணம் குறைவாக கொடுத்திருக்கிறாயே என்று ராமலிங்கத்திடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த ராமலிங்கத்தின் தங்கை கணவர் மணல்மேடை சேர்ந்த மணிமாறன், தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ரகுவரனை மண்டையில் தாக்கியுள்ளார். அப்போது பாட்டில் உடைந்து ராமலிங்கம் முழங்கையில் குத்தி நரம்பு துண்டாகி ரத்தம் கொட்டியது. உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாப இறந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ரகுவரன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் கொலைவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com