வாகனம் மோதி வியாபாரி பலி

வாகனம் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாசுரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுபன் (வயது 60). ஆடு வியாபாரி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் லட்சுமாபுரம் ஆற்று மேம்பாலம் மீது சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com