திருக்கனூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கனூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் வாய்க்கால் கரை வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொன் (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முனுசாமி குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி சின்னப்பொன்னு கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டாராம். மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com