

திருக்கனூர்:
திருக்கனூர் அருகே சுத்துக்கேணி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மண்ணப்பன் (வயது 72). கூலி தொழிலாளி. இவரது மனைவி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து மகனுடன் முதியவர் வசித்து வந்தார். இந்த நிலையில் மகன் தனிக்குடித்தனம்
சென்றதால் மண்ணப்பன் தனிமையில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
செய்துகொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.