திருச்சிற்றம்பலம் அருகே மணல் கடத்தல்- ஒருவர் கைது

திருச்சிற்றம்பலம் அருகே மணல் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அக்னி ஆற்று மணல் படுகையில் மணல் கடத்தல் நடைபெறுவதாக திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது திருச்சிற்றம்பலம் பீரங்கி மேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 42) என்பவர் மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com