திருபுவனத்தில் கார் மோதி தொழிலாளி பலி

திருபுவனத்தில் கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது45). கூலி தொழிலாளி. இவர் மனைவி செல்வி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். வீட்டிற்கு காய்கறி வாங்கிக்கொண்டு திருபுவனம் விராலிமலை பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ஆடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த கார், ஜெயக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த வீரசேகர்(25) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com