தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன், விவசாயி. இவரது மனைவி இளவரசி (வயது 42). இவரும் இவரது மகன் லக்னேஸ் (16) ஆகிய இருவரும் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுப்பதற்காக திருவண்ணாமலைக்கு வந்தனர். துணிகளை வாங்கிக்கொண்டு இரவு வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். மேல்செட்டிப்பட்டு கிராமம் அருகே வந்தபோது ஹெல்மெட் அணிந்து இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று இளவரசியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவத்தின் போது நிலைதடுமாறி தாய்-மகன் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com