பெரம்பலூரில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரேவதி
ரேவதி
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையில் உள்ள ராஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். காய்கறி வியாபாரியான இவருக்கு ரேவதி (வயது 28) என்ற மனைவியும், பர்னேஷ் (5) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கதவை தாழ்ப்பாளிட்டு பூட்டாமல் வீட்டிற்குள் சண்முகசுந்தரம், ரேவதி, பர்னேஷ் ஆகியோர் தூங்கியுள்ளனர். கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் சண்முகசுந்தரத்தின் வீட்டிற்குள் புகுந்து, ரேவதி கழுத்தில் கிடந்த 1¾ பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றார்.

அப்போது டார்ச் லைட் வெளிச்சம் மற்றும் சத்தம் கேட்டு சண்முகசுந்தரம் எழுந்தார். அப்போது மர்மநபர் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com