தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தா பாண்டியன்
தா பாண்டியன்
Published on

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (வயது 89). வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று காலை அவர் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ளன. ரத்த அழுத்தமும் உள்ளது. இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல்நிலையை கவனித்து வருகிறார்கள்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல்நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com