மதுக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

ஒரத்தநாடு அருகே மதுக்கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.6 லட்சம் தப்பியது.
கண்ணுகுடி மதுக்கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளதை படத்தில் காணலாம்.
கண்ணுகுடி மதுக்கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணுகுடி நால்ரோடு அருகே அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடையின் ஊழியர்கள் நேற்றுமுன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை இந்த கடையின் சுவரை துளையிட்டு மர்ம ஆசாமிகள் கடைக்குள் சென்றிருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மதுபான கடையின் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றதும், லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ. 6 லட்சம் தப்பியதும் தெரியவந்தது.

மதுபான கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com