கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 2-ந் தேதி காத்திருப்பு போராட்டம்

டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு நட வடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி வள்ளுவர் கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை:

டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு நட வடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி வள்ளுவர் கோட்டத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணி வரன்முறை, காலமுறை ஊதியம், சுழற்சி முறை, பணியிட மாறுதல் உள்ளிட்ட பிர தான கோரிக்கைகள் நிறை வேற்றப்படாமல் உள்ளன.

டாஸ்மாக் கடைகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த நிலையில் வேறு வேலை மற்றும் இறப்பு ஆகியவற்றால் ஊழியர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாக குறைந்தது.

இதனால் ஊழியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com