டாஸ்மாக் பார் தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற 2 பேர் கைது

கோவையில் டாஸ்மாக் பார் தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

கோவை:

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் சந்துரு(29). கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த வினோத்(23), பிரதாப்(23) ஆகியோருடன் தடாகம் ரோட்டில் உள்ள மதுபான கடை பாருக்கு மது குடிக்க சென்றார். குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் அவர்கள் மீண்டும், மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பிரதாப்பும், வினோத்தும் சேர்ந்து சந்துருவை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவின் நண்பர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்துருவை கொலை செய்து விட்டு தப்பியோடிய பிரதாப் மற்றும் வினோத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com