ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற கெடு நீட்டிப்பு கிடையாது - தலீபான்கள் திட்டவட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் உரிமை பறிக்கப்படும், மனித உரிமை மீறல் ஏற்படும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.
அமெரிக்கப் படை
அமெரிக்கப் படை
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கூறியதாவது:

அமெரிக்கப் படைகள் வெளியேற கெடுவை நீட்டிக்க மாட்டோம். ஆகஸ்டு 31-ம் தேதிக்குள், அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்றும் பணியை முடிக்க வேண்டும்.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும், தலிபான்களுக்கும் இடையே சந்திப்பு நடந்ததா என்று எனக்கு தெரியாது. நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. விமான நிலையத்தில்தான் குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com