தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம்

தாளவாடி அருகே வனச்சாலையை சிறுத்தை கடந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தை
சிறுத்தை
Published on

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தாளவாடியை சேர்ந்த 2 பேர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கும்டாபுரம் அருகே சென்றபோது அங்குள்ள வனச்சாலையை சிறுத்தை ஒன்று கடக்க முயன்றது. சிறுத்தையை கண்டதும் காரில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காரை நிறுத்திவிட்டு சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. வனச்சாலையை சிறுத்தை கடந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com